தொடக்கம் | ||
ஐந்தாம் வேற்றுமை
|
||
77. | ஐந்தாகுவதே, `இன்' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி; `இதனின் இற்று இது' என்னும், அதுவே . |
உரை |
78. | வண்ணம், வடிவே, அளவே, சுவையே, தண்மை, வெம்மை, அச்சம், என்றா- நன்மை, தீமை, சிறுமை, பெருமை, வன்மை, மென்மை, கடுமை, என்றா- முதுமை, இளமை, சிறத்தல், இழித்தல், புதுமை, பழமை, ஆக்கம் ,என்றா- இன்மை, உடைமை, நாற்றம், தீர்தல், பன்மை, சின்மை, பற்று விடுதல், என்று- அன்ன பிறவும் அதன் பால' என்மனார் . |
உரை |