ஆறாம் வேற்றுமை
 
79. ஆறாகுவதே,
`அது' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
தன்னினும் பிறிதினும், `இதனது இது' எனும்
அன்ன கிளவிக் கிழமைத்து, அதுவே .
உரை
   
80. இயற்கையின், உடைமையின், முறைமையின், கிழமையின்,
செயற்கையின், முதுமையின், வினையின், என்றா-
கருவியின், துணையின், கலத்தின், முதலின்,
ஒருவழி உறுப்பின், குழுவின், என்றா-
தெரிந்து மொழிச் செய்தியின், நிலையின், வாழ்ச்சியின்,
திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன;
கூறிய மருங்கின் தோன்றும் கிளவி
ஆறன் பால' என்மனார் புலவர் .
உரை