ஏழாம் வேற்றுமை
 
81. ஏழாகுவதே,
`கண்' எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
வினை செய் இடத்தின், நிலத்தின், காலத்தின்,
அனை வகைக் குறிப்பின் தோன்றும், அதுவே.
உரை
   
82. கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல்,
பின், சார், அயல், புடை, தேவகை, எனாஅ-
முன், இடை, கடை, தலை, வலம், இடம், எனாஅ-
அன்ன பிறவும் அதன் பால' என்மனார் .
உரை