| தொடக்கம் | ||
| வேற்றுமையுருபுகள் மயங்குதல்
|
||
| 84. | கருமம் அல்லாச் சார்பு' என் கிளவிக்கு உரிமையும் உடைத்தே, `கண்' என் வேற்றுமை . |
உரை |
| 85. | சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும் வினை நிலை ஒக்கும்' என்மனார் புலவர் |
உரை |
| 86. | கண் கன்றல் பொருண்மேல் வருஞ் சொல்லும் செலவு . | உரை |
| 87. | முதற்சினைக் கிளவிக்கு 'அது' என் வேற்றுமை முதற்கண் வரினே, சினைக்கு ஐ வருமே. |
உரை |
| 88. | முதல் முன் ஐ வரின், `கண்' என் வேற்றுமை சினை முன் வருதல் தெள்ளிது' என்ப. |
உரை |
| 89. | முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ; நுவலும் காலை, சொற்குறிப்பினவே . |
உரை |
| 90. | பிண்டப் பெயரும் ஆயியல் =திரியா; பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே . |
உரை |
| 91. | ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே . | உரை |
| 92. | மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கு ஓரனைய' என்மனார் புலவர் . |
உரை |
| 93. | இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம், அவ் இரண்டன் மருங்கின், ஏதுவும் ஆகும். |
உரை |
| 94. | அது' என் வேற்றுமை உயர்திணைத்தொகைவயின், `அது' என் உருபு கெட, குகரம் வருமே . |
உரை |
| 95. | தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் கடி நிலை இலவே, பொருள்வயினான. |
உரை |
| 96. | ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின், வேற்றுமை தெரிப, உணருமோரே. |
உரை |
| 97. | ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும் தாம் பிரிவு இலவே, தொகை வரு காலை. |
உரை |
| 98. | ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழும் ஆகும், உறை நிலத்தான. |
உரை |
| 99. | குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும் |
உரை |
| 100. | அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே, பொருள்வயினான |
உரை |
| 101. | அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது, உருபினும் பொருளினும் மெய் தடுமாறி, இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபு இடன் இலவே, தெரியுமோர்க்கே. |
உரை |