தொடக்கம் | ||
அவ்வுருபுகளின் இயல்புகள்
|
||
102. | உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒரு சொல் நடைய, பொருள் செல் மருங்கே. |
உரை |
103. | இறுதியும், இடையும், எல்லா உருபும், நெறி படு பொருள்வயின் நிலவுதல் வரையார். |
உரை |
104. | பிறிது பிறிது ஏற்றலும், உருபு தொக வருதலும், நெறிபட வழங்கிய வழி மருங்கு' என்ப. |
உரை |
105. | ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய் உருபு தொகாஅ, இறுதியான. |
உரை |
106. | யாதன் உருபின் கூறிற்றுஆயினும், பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும். |
உரை |
107. | எதிர் மறுத்து மொழியினும், தம்தம் மரபின் பொருள் நிலை திரியா, வேற்றுமைச் சொல்லே. |
உரை |
108. | கு, ஐ, ஆன்' என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும், செய்யுளுள்ளே. |
உரை |
109. | அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின் குவ்வும் ஐயும் இல்' என மொழிப . |
உரை |
110. | இதனது இது இற்று' என்னும் கிளவியும், அதனைக் கொள்ளும் பொருள்வயினானும், அதனான் செயற்படற்கு ஒத்த கிளவியும், முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும், பால் வரை கிள+வியும், பண்பின் ஆக்கமும், காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும், பற்று விடு கிளவியும், தீர்ந்து மொழிக் கிளவியும், அன்ன பிறவும், நான்கன் உருபின் தொல் நெறி மரபின, தோன்றலாறே. |
உரை |
111. | ஏனை உருபும் அன்ன மரபின; மானம் இலவே, சொல் முறையான. |
உரை |
112. | வினையே, செய்வது, செயப்படுபொருளே, நிலனே, காலம், கருவி, என்றா- இன்னதற்கு, இது பயன் ஆக, என்னும் அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ, ஆயெட்டு' என்ப-தொழில் முதனிலையே . |
உரை |
113. | அவைதாம், வழங்கு இயல் மருங்கின், குன்றுவ குன்றும். |
உரை |