தொடக்கம் | ||
உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
|
||
120. | அவைதாம், இ, உ, ஐ, ஓ, என்னும் இறுதி அப் பால் நான்கே-உயர்திணைமருங்கின் மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே. |
உரை |
121. | அவற்றுள், இ ஈ ஆகும்; ஐ ஆய் ஆகும். |
உரை |
122. | ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் . | உரை |
123. | உகரம்தானே குற்றியலுகரம் . | உரை |
124. | ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம் விளி கொள்ளா' என்மனார் புலவர். |
உரை |
125. | அளபெடை மிகூஉம் இகர இறு பெயர் இயற்கைய ஆகும் செயற்கைய' என்ப. |
உரை |
126. | முறைப் பெயர் மருங்கின் ஐ என் இறுதி ஆவொடு வருதற்கு உரியவும் உளவே. |
உரை |
127. | அண்மைச் சொல்லே இயற்கை ஆகும். | உரை |
128. | ன, ர, ல, ள, என்னும் அந் நான்கு' என்ப- 'புள்ளி இறுதி விளி கொள் பெயரே'. |
உரை |
129. | ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா . | உரை |
130. | அவற்றுள், 'அன்' என் இறுதி ஆ ஆகும்மே. |
உரை |
131. | அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும். | உரை |
132. | ஆன்' என் இறுதி இயற்கை ஆகும் . | உரை |
133. | தொழிலின் கூறும் 'ஆன்' என் இறுதி ஆய் ஆகும்மே, விளிவயினான. |
உரை |
134. | பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே . | உரை |
135. | அளபெடைப் பெயரே அளபெடை இயல . | உரை |
136. | முறைப் பெயர்க் கிளவி ஏயொடு வருமே. | உரை |
137. | தான்' என் பெயரும், சுட்டுமுதற்பெயரும், `யான்' என் பெயரும், வினாவின் பெயரும், அன்றி அனைத்தும் விளி கோள் இலவே . |
உரை |
138. | ஆரும் அருவும் ஈரொடு சிவணும் . | உரை |
139. | 'தொழிற்பெயர் ஆயின், ஏகாரம் வருதலும் வழுக்கு இன்று' என்மனார், வயங்கியோரே. |
உரை |
140. | பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே . | உரை |
141. | அளபெடைப் பெயரே அளபெடை இயல . | உரை |
142. | சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன . | உரை |
143. | நும்மின் திரிபெயர், வினாவின் பெயர், என்று அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும். |
உரை |
144. | எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். |
உரை |
145. | அயல் நெடிதுஆயின், இயற்கை ஆகும் . | உரை |
146. | வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் 'ஆள்' என் இறுதி ஆய் ஆகும்மே, விளிவயினான . |
உரை |
147. | முறைப் பெயர்க் கிளவி முறைப் பெயர் இயல. | உரை |
148. | சுட்டுமுதற்பெயரும் வினாவின் பெயரும் முன் கிளந்தன்ன' என்மனார் புலவர். |
உரை |
149. | அளபெடைப் பெயரே அளபெடைப் பெயர். | உரை |