புறனடை
 
152. உள எனப்பட்ட எல்லாப் பெயரும்,
அளபு இறந்தனவே, விளிக்கும் காலை,
சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான.
உரை
   
153. `அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம் முறைப்பெயரொடு சிவணாதுஆயினும்,
விளியொடு கொள்ப' தெளியுமோரே.
உரை
   
154. த, ந, நு, எ ,என அவை முதல் ஆகித்
தன்மை குறித்த ன, ர, ள, என் இறுதியும்,
அன்ன பிறவும், பெயர் நிலை வரினே,
இன்மை வேண்டும், விளியொடு கொளலே.
உரை