தொடக்கம் | ||
சொற்களின் இயல்பு
|
||
155. | எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. | உரை |
156. | பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும், சொல்லின் ஆகும்' என்மனார் புலவர் . |
உரை |
157. | தெரிபு வேறு நிலையலும், குறிப்பின் தோன்றலும், இரு பாற்று' என்ப 'பொருண்மை நிலையே' . |
உரை |
158. | சொல் எனப்படுப பெயரே, வினை, என்று ஆயிரண்டு' என்ப, அறிந்திசினோரே . |
உரை |
159. | இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும், அவற்று வழி மருங்கின் தோன்றும்' என்ப . |
உரை |