உயர்திணைப் பெயர்கள்
 
162. அவ்வழி,
அவன், இவன், உவன், என வரூஉம் பெயரும்;
அவள், இவள், உவள், என வரூஉம் பெயரும்;
அவர், இவர், உவர், என வரூஉம் பெயரும்;
யான், யாம், நாம், என வரூஉம் பெயரும்;
யாவன், யாவள், யாவர், என்னும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
பால் அறிவந்த உயர்திணைப் பெயரே .
உரை
   
163. 'ஆண்மை அடுத்த மகன்' என் கிளவியும்,
'பெண்மை அடுத்த மகள்' என் கிளவியும்,
பெண்மை அடுத்த இகர இறுதியும்,
நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்,
முறைமை சுட்டா மகனும் மகளும்,
மாந்தர் மக்கள் என்னும் பெயரும்,
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும்,
சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும்,
அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும்,
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ,
அப் பதினைந்தும் அவற்று ஓரன்ன .
உரை
   
164. எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்,
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்,
பெண்மை அடுத்த மகன் என் கிளவியும்,
அன்ன இயல' என்மனார் புலவர் .
உரை
   
165. நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின் பெயரே,
வினைப் பெயர், உடைப் பெயர்,பண்பு கொள் பெயரே,
பல்லோர் குறித்த முறை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே,
கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே,
இன்றிவர் என்னும் எண்ணியற்பெயரொடு,
அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே .
உரை
   
166. அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
என்ன பெயரும் அத் திணையவ்வே .
உரை