தொடக்கம் | ||
அஃறிணைப் பெயர்கள்
|
||
167. | அது, இது, உது, என வரூஉம் பெயரும்; அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்; அவை, இவை, உவை, என வரூஉம் பெயரும்; அவை முதல் ஆகிய வகரப் பெயரும்; `யாது, யா, யாவை,' என்னும் பெயரும்; ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும் பால் அறி வந்த அஃறிணைப் பெயரே . |
உரை |
168. | பல்ல, பல, சில, என்னும் பெயரும், உள்ள, இல்ல, என்னும் பெயரும், வினைப் பெயர்க் கிளவியும், பண்பு கொள் பெயரும், 'இனைத்து' எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும், ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட, அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன . |
உரை |
169. | கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே, கொள் வழி உடைய, பல அறி சொற்கே . |
உரை |
170. | அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த என்ன பெயரும் அத் திணையவ்வே . |
உரை |
171. | தெரிநிலை உடைய, அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும், வினையொடு வரினே . |
உரை |