விரவுப் பெயர்கள்
 
172. இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின்,
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்,
நினையும் காலை, தம்தம் மரபின்
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே .
உரை
   
173. நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே,
அன்ன மரபின் வினைவயினான .
உரை
   
174. இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயரே,
முறைப்பெயர்க் கிளவி, தாமே, தானே,
எல்லாம், நீயிர், நீ, எனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும், ஆஅங்கு
அன்னவை தோன்றின், அவற்றொடும் கொளலே! .
உரை
   
175. அவற்றுள்,
நான்கே இயற்பெயர்; நான்கே சினைப்பெயர்;
நான்கு என மொழிமனார், சினைமுதற்பெயரே;
முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே;
ஏனைப் பெயரே தம்தம் மரபின .
உரை
   
176. அவைதாம்,
பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர்,
பன்மை இயற்பெயர், ஒருமை இயற்பெயர், என்று
அந் நான்கு' என்ப-'இயற்பெயர் நிலையே' .
உரை
   
177. பெண்மைச் சினைப்பெயர், ஆண்மைச் சினைப்பெயர்,
பன்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர், என்று
அந் நான்கு' என்ப-'சினைப்பெயர் நிலையே' .
உரை
   
178. பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர், என்று
அந் நான்கு' என்ப-'சினைமுதற்பெயரே' .
உரை
   
179. பெண்மை முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர், என்று
ஆயிரண்டு' என்ப-'முறைப்பெயர் நிலையே' .
உரை
   
180. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே .
உரை
   
181. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே .
உரை
   
182. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே, பலவே, ஒருவர், என்னும்
என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே .
உரை
   
183. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே .
உரை
   
184. தாம்' என் கிளவி பன்மைக்கு உரித்தே. உரை
   
185. தான்' என் கிளவி ஒருமைக்கு உரித்தே. உரை
   
186. எல்லாம்' என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே .
உரை
   
187. தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது,
உயர்திணை மருங்கின், ஆக்கம் இல்லை .
உரை
   
188. நீயிர், நீ' என வரூஉம் கிளவி
பால் தெரிபு இலவே; உடன்மொழிப் பொருள.
உரை
   
189. அவற்றுள்,
`நீ' என் கிளவி ஒருமைக்கு உரித்தே .
உரை
   
190. ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே. உரை
   
191. ஒருவர்' என்னும் பெயர்நிலைக் கிளவி
இரு பாற்கும் உரித்தே, தெரியும் காலை .
உரை
   
192. தன்மை சுட்டின், பன்மைக்கு ஏற்கும். உரை
   
193. இன்ன பெயரே இவை எனல் வேண்டின்,
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்! .
உரை
   
194. மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
மகடூஉ இயற்கை, தொழில்வயினான .
உரை
   
195. ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே;
ஆயிடன் அறிதல், செய்யுளுள்ளே!.
உரை
   
196. இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா;
நிலத்துவழி மருங்கின் தோன்றலான.
உரை
   
197. திணையொடு பழகிய பெயர் அலங்கடையே. உரை