வினைச்சொல்லின் பொது இயல்பு
 
198. வினை' எனப்படுவது வேற்றுமை கொள்ளாது,
நினையும் காலை, காலமொடு தோன்றும்.
உரை
   
199. காலம்தாமே மூன்று' என மொழிப. உரை
   
200. இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய, தோன்றலாறே .
உரை
   
201. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்-
உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
அம் மூஉருபின,-தோன்றலாறே.
உரை