உயர்திணை வினை
 
202. அவைதாம்,
அம், ஆம், எம், ஏம், என்னும் கிளவியும்,
உம்மொடு வரூஉம் க, ட, த, ற, என்னும்
அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.
உரை
   
203. க, ட, த, ற, என்னும்
அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு,
என், ஏன், அல், என வரூஉம் ஏழும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.
உரை
   
204. அவற்றுள்,
"செய்கு" என் கிளவி வினையொடு முடியினும்,
அவ் இயல் திரியாது' என்மனார் புலவர்.
உரை
   
205. அன், ஆன், அள், ஆள், என்னும் நான்கும்
ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.
உரை
   
206. அர், ஆர், ப, என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.
உரை
   
207. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை;
காலக் கிளவியொடு முடியும் என்ப.
உரை
   
208. பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
அந் நால்-ஐந்தும் மூன்று தலை இட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.
உரை
   
209. அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
எண் இயல் மருங்கின் திரிபவை உளவே.
உரை
   
210. யாஅர் என்னும் வினாவின் கிளவி
அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.
உரை
   
211. பால் அறி மரபின் அம் மூஈற்றும்
ஆ ஓ ஆகும், செய்யுளுள்ளே.
உரை
   
212. ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். உரை
   
213. அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்,
'கண்' என் வேற்றுமை நிலத்தினானும்,
ஒப்பினானும், பண்பினானும், என்று
அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும்.
உரை
   
214. அன்மையின், இன்மையின், உண்மையின், வன்மையின்,
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்.
உரை
   
215. பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை ருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே.
உரை