தொடக்கம் | ||
அஃறிணை வினை
|
||
216. | அ, ஆ, வ என வரூஉம் இறுதி அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை. |
உரை |
217. | ஒன்றன் படர்க்கை த, ற, ட, ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும். |
உரை |
218. | பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த அம் மூ-இரண்டும் அஃறிணையவ்வே. |
உரை |
219. | அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும் ஒக்கும் என்ப-`எவன் என் வினாவே'. |
உரை |
220. | `இன்று, இல, உடைய' என்னும் கிளவியும், `அன்று, உடைத்து, அல்ல' என்னும் கிளவியும், பண்பு கொள் கிளவியும், `உள' என் கிளவியும், பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும், ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ, அப் பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும. |
உரை |
221. | பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. |
உரை |