தொடக்கம் | ||
விரவு வினை
|
||
222. | முன்னிலை, வியங்கோள், வினை எஞ்சு கிளவி, இன்மை செப்பல், `வேறு' என் கிளவி, `செய்ம்மன, செய்யும், செய்த' என்னும் அம் முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி, இரு திணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. |
உரை |
223. | அவற்றுள், முன்னிலைக் கிளவி `இ, ஐ, ஆய்' என வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். |
உரை |
224. | "இர், ஈர், மின்" என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல் ஓரனைய' என்மனார் புலவர். |
உரை |
225. | எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம் பாற்கும் உரிய, தோன்றலாறே. |
உரை |
226. | அவற்றுள், முன்னிலை, தன்மை, ஆயீரிடத்தொடு மன்னாது ஆகும், வியங்கோள் கிளவி. |
உரை |
227. | பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை, அவ் வயின் மூன்றும், `நிகழும் காலத்துச் செய்யும்' என்னும் கிளவியொடு கொள்ளா. |
உரை |
228. | செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய, செயற்கு என அவ் வகை ஒன்பதும் வினை எஞ்சு கிளவி. |
உரை |
229. | பின், முன், கால், கடை, வழி, இடத்து என்னும் அன்ன மரபின் காலம் கண்ணிய என்ன கிளவியும் அவற்று இயல்பினவே. |
உரை |
230. | அவற்றுள், முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின. |
உரை |
231. | அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின், சினையொடு முடியா, முதலொடு முடியினும், வினை ஓரனைய என்மனார் புலவர். |
உரை |
232. | ஏனை எச்சம் வினைமுதலானும், ஆன் வந்து இயையும் வினைநிலையானும், தாம் இயல் மருங்கின் முடியும் என்ப. |
உரை |
233. | பல் முறையானும் வினை எஞ்சு கிளவி சொல் முறை முடியாது அடுக்குந வரினும், முன்னது முடிய முடியுமன் பொருளே. |
உரை |
234. | நிலனும், பொருளும், காலமும், கருவியும், வினைமுதற் கிளவியும், வினையும், உளப்பட அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய, 'செய்யும், செய்த' என்னும் சொல்லே. |
உரை |
235. | அவற்றொடு வருவழி, `செய்யும்' என் கிளவி, முதற்கண் வரைந்த மூஈற்றும் உரித்தே. |
உரை |
236. | பெயர் எஞ்சு கிளவியும் வினை எஞ்சு கிளவியும், எதிர் மறுத்து மொழியினும், பொருள் நிலை திரியா. |
உரை |
237. | தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின் எச் சொல் ஆயினும், இடைநிலை வரையார். |
உரை |
238. | அவற்றுள், `செய்யும்' என்னும் பெயர் எஞ்சு கிளவிக்கு மெய்யொடும் கெடுமே, ஈற்றுமிசை உகரம்; `அவ் இடன் அறிதல்!' என்மனார் புலவர். |
உரை |
239. | செய்து என் எச்சத்து இறந்த காலம், எய்து இடன் உடைத்தே, வாராக் காலம். |
உரை |
240. | முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந் நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும். |
உரை |
241. | வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள' என்மனார் புலவர். |
உரை |
242. | மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி, அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி, செய்வது இல்வழி, நிகழும் காலத்து மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. |
உரை |
243. | இது செயல் வேண்டும் என்னும் கிளவி இரு வயின் நிலையும் பொருட்டு ஆகும்மே- தன் பாலானும் பிறன் பாலானும். |
உரை |
244. | வன்புற வரூஉம் வினாவுடை வினைச் சொல் எதிர் மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. |
உரை |
245. | வாராக் காலத்து வினைச்சொல் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்- இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. |
உரை |
246. | செயப்படுபொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே. |
உரை |
247. | இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும், மயங்குமொழிக் கிளவி. |
உரை |
248. | ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். | உரை |