பொதுவிலக்கணம்
 
249. இடை' எனப்படுப பெயரொடும் வினையொடும்
நடை பெற்று இயலும்; தமக்கு இயல்பு இலவே.
உரை
   
250. அவைதாம்,
புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவுநவும்,
வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும்,
வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்,
அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்,
இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்,
தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும்,
ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும், என்று
அப் பண்பினவே, நுவலும் காலை.
உரை
   
251. அவைதாம்,
முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்,
தம் ஈறு திரிதலும்
பிறிது அவண் நிலையலும்,
அன்னவை எல்லாம் உரிய என்ப.
உரை