| தொடக்கம் | ||
| சிறப்பிலக்கணம்
|
||
| 252. | கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப-`மன்னைச் சொல்லே'. |
உரை |
| 253. | விழைவே, காலம் ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப-`தில்லைச் சொல்லே'. |
உரை |
| 254. | அச்சம், பயம் இலி, காலம், பெருமை, என்று அப் பால் நான்கே-கொன்னைச் சொல்லே. |
உரை |
| 255. | எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை, முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம், என்று அப் பால் எட்டே-உம்மைச் சொல்லே. |
உரை |
| 256. | பிரிநிலை, வினாவே, எதிர்மறை, ஒழியிசை, தெரிநிலைக் கிளவி, சிறப்பொடு தொகைஇ, இரு-மூன்று' என்ப- ஓகாரம்மே. |
உரை |
| 257. | தேற்றம், வினாவே, பிரிநிலை, எண்ணே, ஈற்றசை, இவ் ஐந்து-ஏகாரம்மே. |
உரை |
| 258. | வினையே, குறிப்பே, இசையே, பண்பே, எண்ணே, பெயரொடு, அவ் அறு கிளவியும் கண்ணிய நிலைத்தே-`என' என் கிளவி. |
உரை |
| 259. | என்று என் கிளவியும் அதன் ஓரற்றே. | உரை |
| 260. | விழைவின் தில்லை தன்னிடத்து இயலும். | உரை |
| 261. | தெளிவின் ஏயும், சிறப்பின் ஓவும், அளபின் எடுத்த இசைய என்ப. |
உரை |
| 262. | மற்று என் கிளவி வினைமாற்று, அசைநிலை, அப் பால் இரண்டு' என மொழிமனார் புலவர். |
உரை |
| 263. | 'எற்று' என் கிளவி இறந்த பொருட்டே. | உரை |
| 264. | 'மற்றையது' என்னும் கிளவிதானே சுட்டு நிலை ஒழிய, இனம் குறித்தன்றே. |
உரை |
| 265. | 'மன்ற' என் கிளவி தேற்றம் செய்யும். | உரை |
| 266. | தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே. | உரை |
| 267. | 'அந்தில்-ஆங்க, அசைநிலைக் கிளவி, என்று ஆயிரண்டாகும் இயற்கைத்து' என்ப. |
உரை |
| 268. | கொல்லே ஐயம். | உரை |
| 269. | எல்லே இலக்கம். | உரை |
| 270. | இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்கு உரிஎழுத்தின் வினையொடு முடிமே. |
உரை |
| 271. | அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல்!. | உரை |
| 272. | 'ஏயும் குரையும்-இசைநிறை, அசைநிலை, ஆயிரண்டு ஆகும் இயற்கைய' என்ப. |
உரை |
| 273. | 'மா' என் கிளவி வியங்கோள் அசைச்சொல். | உரை |
| 274. | 'மியா, இக, மோ, மதி, இகும், சின்' என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். |
உரை |
| 275. | 'அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய' என்மனார் புலவர். |
உரை |
| 276. | அம்ம கேட்பிக்கும். | உரை |
| 277. | ஆங்க உரையசை. | உரை |
| 278. | ஒப்பு இல் போலியும் அப் பொருட்டு ஆகும். | உரை |
| 279. | 'யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது' என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. |
உரை |
| 280. | 'ஆக, ஆகல், என்பது' என்னும் ஆவயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை. |
உரை |
| 281. | 'ஈர் அளபு இசைக்கும் இறுதியில் உயிரே ஆயியல் நிலையும் காலத்தானும், அளபெடை நிலையும் காலத்தானும், அளபெடை இன்றித் தான் வரும் காலையும், உள' என மொழிப-'பொருள் வேறுபடுதல்' குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். |
உரை |
| 282. | நன்று ஈற்று ஏயும், அன்று ஈற்று ஏயும், அந்து ஈற்று ஓவும், அன் ஈற்று ஓவும், அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும். |
உரை |
| 283. | எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும், தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே. |
உரை |
| 284. | எஞ்சு பொருட் கிளவி செஞ்சொல்ஆயின், பிற்படக் கிளவார், முற்படக் கிளத்தல்!. |
உரை |
| 285. | முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின், எச்சக் கிளவி உரித்தும் ஆகும். |
உரை |
| 286. | 'ஈற்று நின்று இசைக்கும் ஏ' என் இறுதி, கூற்றுவயின், ஒர் அளபு ஆகலும் உரித்தே. |
உரை |