| தொடக்கம் | ||
| எண்ணிடைச் சொற்கள்
|
||
| 287. | உம்மை எண்ணும், 'என' என் எண்ணும், தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே. |
உரை |
| 288. | 'எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும், எண்ணுக் குறித்து இயலும்' என்மனார் புலவர். |
உரை |
| 289. | 'உம்மை தொக்க எனா' என் கிளவியும், 'ஆ ஈறு ஆகிய என்று' என் கிளவியும், ஆயிரு கிளவியும் எண்ணுவழிப்பட்டன. |
உரை |
| 290. | அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும், பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும், ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும், யாவயின் வரினும், தொகை இன்று இயலா. |
உரை |
| 291. | உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார். | உரை |