புறனடை
 
292. உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே. உரை
   
293. வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா;
நினையல் வேண்டும், அவற்று அவற்று இயல்பே.
உரை
   
294. என்றும், எனவும், ஒடுவும், தோன்றி,
ஒன்று வழி உடைய, எண்ணினுள் பிரிந்தே.
உரை
   
295. அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என
மெய் பெறக் கிளந்த இயல ஆயினும்,
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றி,
திரிந்து வேறு வரினும், தெரிந்தனர் கொளலே!.
உரை
   
296. கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்,
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே!.
உரை