தொடக்கம் | ||
சிறப்பிலக்கணம்
|
||
299. | அவைதாம், 'உறு, தவ, நனி, என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள' என்ப. |
உரை |
300. | உரு உட்கு ஆகும்; புரை உயர்பு ஆகும். | உரை |
301. | குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே. | உரை |
302. | செல்லல், இன்னல், இன்னாமையே. | உரை |
303. | மல்லல் வளனே;. | உரை |
304. | ஏ பெற்று ஆகும். | உரை |
305. | உகப்பே உயர்தல்; உவப்பே உவகை. | உரை |
306. | பயப்பே பயன் ஆம். | உரை |
307. | பசப்பு நிறன் ஆகும். | உரை |
308. | இயைபே புணர்ச்சி. | உரை |
309. | இசைப்பு இசை ஆகும். | உரை |
310. | அலமரல், தெருமரல், ஆயிரண்டும் சுழற்சி. | உரை |
311. | மழவும் குழவும் இளமைப் பொருள. | உரை |
312. | சீர்த்தி மிகு புகழ்;. | உரை |
313. | மாலை இயல்பே. | உரை |
314. | கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். | உரை |
315. | கதழ்வும் துனைவும் விரைவின் பொருள. | உரை |
316. | அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். | உரை |
317. | வார்தல், போகல், ஒழுகல், மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. |
உரை |
318. | தீர்தலும் தீர்த்தலும் விடல் பொருட்டு ஆகும். | உரை |
319. | கெடவரல், பண்ணை, ஆயிரண்டும் விளையாட்டு. | உரை |
320. | தடவும் கயவும் நளியும் பெருமை. | உரை |
321. | அவற்றுள், 'தட' என் கிளவி கோட்டமும் செய்யும். |
உரை |
322. | 'கய' என் கிளவி மென்மையும் செய்யும். | உரை |
323. | 'நளி' என் கிளவி செறிவும் ஆகும். | உரை |
324. | பழுது பயம் இன்றே. | உரை |
325. | சாயல் மென்மை. | உரை |
326. | 'முழுது' என் கிளவி எஞ்சாப் பொருட்டே. | உரை |
327. | வம்பு நிலை இன்மை. | உரை |
328. | மாதர் காதல். | உரை |
329. | நம்பும் மேவும் நசை ஆகும்மே. | உரை |
330. | ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். |
உரை |
331. | புலம்பே தனிமை. | உரை |
332. | துவன்று நிறைவு ஆகும். | உரை |
333. | முரஞ்சல் முதிர்வே. | உரை |
334. | வெம்மை வேண்டல். | உரை |
335. | பொற்பே பொலிவு. | உரை |
336. | வறிது சிறிது ஆகும். | உரை |
337. | ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும். | உரை |
338. | பிணையும் பேணும் பெட்பின் பொருள. | உரை |
339. | பணையே பிழைத்தல்; பெருப்பும் ஆகும். | உரை |
340. | படரே உள்ளல்; செலவும் ஆகும். | உரை |
341. | பையுளும் சிறுமையும் நோயின் பொருள. | உரை |
342. | எய்யாமையே அறியாமையே. | உரை |
343. | நன்று பெரிது ஆகும். | உரை |
344. | தாவே வலியும் வருத்தமும் ஆகும். | உரை |
345. | தெவுக் கொளல் பொருட்டே. | உரை |
346. | தெவ்வுப் பகை ஆகும். | உரை |
347. | விறப்பும், உறப்பும், வெறுப்பும் செறிவே. | உரை |
348. | அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். |
உரை |
349. | கம்பலை, சும்மை, கலியே, அழுங்கல், என்று இவை நான்கும் அரவப் பொருள. |
உரை |
350. | அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். |
உரை |
351. | 'கழுமு' என் கிளவி மயக்கம் செய்யும். | உரை |
352. | செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். | உரை |
353. | விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும். | உரை |
354. | கருவி தொகுதி. | உரை |
355. | கமம் நிறைந்து இயலும். | உரை |
356. | அரியே ஐம்மை. | உரை |
357. | கவவு அகத்திடுமே. | உரை |
358. | 'துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப் பொருட் கிளவி' என்மனார் புலவர். |
உரை |
359. | அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும். |
உரை |
360. | இலம்பாடு, ஒற்கம், ஆயிரண்டும் வறுமை. | உரை |
361. | ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள. | உரை |
362. | கவர்வு விருப்பு ஆகும். | உரை |
363. | சேரே திரட்சி. | உரை |
364. | 'வியல்' என் கிளவி அகலப் பொருட்டே. | உரை |
365. | 'பேம், நாம், உரும்' என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும் அச்சப் பொருள. |
உரை |
366. | வய வலி ஆகும். | உரை |
367. | வாள் ஒளி ஆகும். | உரை |
368. | 'துயவு' என் கிளவி அறிவின் திரிபே. | உரை |
369. | உயாவே உயங்கல். | உரை |
370. | உசாவே சூழ்ச்சி. | உரை |
371. | 'வயா' என் கிளவி வேட்கைப் பெருக்கம். | உரை |
372. | கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள. | உரை |
373. | 'நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய' என்ப. | உரை |
374. | நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. | உரை |
375. | 'புனிறு' என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே. | உரை |
376. | நனவே களனும் அகலமும் செய்யும். | உரை |
377. | மதவே மடனும் வலியும் ஆகும். | உரை |
378. | மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. | உரை |
379. | புதிதுபடல் பொருட்டே, யாணர்க் கிளவி. | உரை |
380. | அமர்தல் மேவல். | உரை |
381. | யாணுக் கவின் ஆம். | உரை |
382. | பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள . | உரை |
383. | 'கடி' என் கிளவி வரைவே, கூர்மை, காப்பே, புதுமை, விரைவே, விளக்கம், மிகுதி, சிறப்பே, அச்சம், முன்தேற்று, ஆயீர்-ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே. |
உரை |
384. | ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. | உரை |
385. | ஐ வியப்பு ஆகும். | உரை |
386. | முனைவு முனிவு ஆகும். | உரை |
387. | வையே கூர்மை. | உரை |
388. | எறுழ் வலி ஆகும். | உரை |