தொடக்கம் | ||
சொல்லும் பொருளும்
|
||
389. | மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே. |
உரை |
390. | கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல வேறு பிற தோன்றினும், அவற்றொடு கொளலே!. |
உரை |
391. | பொருட்குப் பொருள் தெரியின், அது வரம்பு இன்றே. | உரை |
392. | பொருட்குத் திரிபு இல்லை, உணர்த்த வல்லின். | உரை |
393. | உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. | உரை |
394. | மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. | உரை |
395. | எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே. | உரை |