தொடக்கம் | ||
எழுத்துக்களின் இயக்கம்
|
||
46. | மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். | உரை |
47. | தம் இயல் கிளப்பின், எல்லா எழுத்தும் மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை. |
உரை |
48. | ய, ர, ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற, க, ச, த, ப, ங, ஞ, ந, ம ஈர் ஒற்று ஆகும். |
உரை |
49. | அவற்றுள், ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா. |
உரை |
50. | குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின், தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல. |
உரை |
51. | செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் னகார, மகாரம் ஈர் ஒற்று ஆகும். |
உரை |
52. | னகாரை முன்னர் மகாரம் குறுகும். | உரை |
53. | மொழிப்படுத்து இசைப்பினும், தெரிந்து வேறு இசைப்பினும், எழுத்து இயல் `திரியா' என்மனார் புலவர். |
உரை |