தொடக்கம் | ||
சொற்களின் வகை
|
||
397. | இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று அனைத்தே-செய்யுள் ஈட்டச் சொல்லே. |
உரை |
398. | அவற்றுள், இயற்சொல்தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி, தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. |
உரை |
399. | ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும், வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும், இரு பாற்று' என்ப-'திரிசொல்-கிளவி'. |
உரை |
400. | செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம் குறிப்பினவே-திசைச்சொல்-கிளவி. |
உரை |
401. | வடசொல்-கிளவி வட எழுத்து ஓரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. |
உரை |
402. | சிதைந்தன வரினும், இயைந்தன வரையார். | உரை |
403. | அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை, வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும், விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும், நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழிக் குறுக்கலும், நாட்டல் வலிய' என்மனார் புலவர். |
உரை |