தொடக்கம் | ||
பொருள்கோள்
|
||
404. | நிரல்-நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று, அவை நான்கு' என்ப-'மொழி புணர் இயல்பே. |
உரை |
405. | அவற்றுள், நிரல்-நிறைதானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றி, சொல் வேறு நிலைஇ, பொருள் வேறு நிலையல். |
உரை |
406. | சுண்ணம்தானே பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர் ஒட்டு வழி அறிந்து, துணித்தனர் இயற்றல். |
உரை |
407. | அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து, சீர் நிலை திரியாது, தடுமாறும்மே. |
உரை |
408. | பொருள் தெரி மருங்கின் ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும் தோற்றமும் வரையார், அடிமறியான. |
உரை |
409. | மொழிமாற்று இயற்கை சொல் நிலை மாற்றி, பொருள் எதிர் இயைய, முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல்!. |
உரை |