வினைமுற்றின் வகை
 
427. 'இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்ற
சிறப்புடை மரபின் அம் முக் காலமும்,
தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
அம் மூஇடத்தான், வினையினும் குறிப்பினும்,
மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்
அவ் ஆறு' என்ப-'முற்று இயல் மொழியே'.
உரை
   
428. எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். உரை
   
429. அவைதாம்,
தம்தம் கிளவி அடுக்குந வரினும்,
எத் திறத்தானும் பெயர் முடிபினவே.
உரை