தொடக்கம் | ||
எச்சச் சொற்களின் வகை
|
||
430. | பிரிநிலை வினையே, பெயரே, ஒழியிசை, எதிர்மறை, உம்மை, எனவே, சொல்லே, குறிப்பே, இசையே, ஆயீர்-ஐந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி. |
உரை |
431. | அவற்றுள், பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின |
உரை |
432. | வினை எஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே; ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. |
உரை |
433. | பெயர் எஞ்சு கிளவி பெயரொடு முடிமே. | உரை |
434. | ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. | உரை |
435. | எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. | உரை |
436. | உம்மை எச்சம் இரு வீற்றானும் தன்வினை ஒன்றிய முடிபு ஆகும்மே. |
உரை |
437. | தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை, நிகழும் காலமொடு வாராக் காலமும், இறந்த காலமொடு வாராக் காலமும், மயங்குதல் வரையார் முறைநிலையான. |
உரை |
438. | 'என' என் எச்சம் வினையொடு முடிமே. | உரை |
439. | 'எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவி இல' என மொழிப. |
உரை |
440. | அவைதாம், தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும். |
உரை |
441. | 'சொல்' என் எச்சம், முன்னும் பின்னும், சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே. |
உரை |