தொடக்கம் | ||
சில மரபு வகை
|
||
442. | அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்!. | உரை |
443. | மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல்!. | உரை |
444. | 'ஈ, தா, கொடு' எனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகு இடன் உடைய. |
உரை |
445. | அவற்றுள், 'ஈ' என் கிளவி இழிந்தோன் கூற்றே. |
உரை |
446. | 'தா' என் கிளவி ஒப்போன் கூற்றே. | உரை |
447. | 'கொடு' என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. | உரை |
448. | 'கொடு என் கிளவி படர்க்கைஆயினும், தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின் தன்னிடத்து இயலும்' என்மனார் புலவர். |
உரை |
449. | பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும், திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும், தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும், மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும், மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும், அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. |
உரை |
450. | 'செய்யாய்' என்னும் முன்னிலை வினைச்சொல் 'செய்' என் கிளவி ஆகு இடன் உடைத்தே. |
உரை |
451. | முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. |
உரை |
452. | கடி சொல் இல்லை, காலத்துப் படினே. | உரை |
453. | குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்!. | உரை |
454. | குறைந்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. | உரை |
455. | இடைச் சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. | உரை |
456. | உரிச் சொல் மருங்கினும் உரியவை உரிய. | உரை |
457. | வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய. | உரை |
458. | உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்!. | உரை |
459. | முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே, இன்ன என்னும் சொல்முறையான. |
உரை |
460. | ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். | உரை |
461. | ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. |
உரை |
462. | முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே; ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். |
உரை |