“நடாஅக் கரும்பமன்ற தோளாரைக் காணின் விடாஅலோம் பென்றா ரெமர்” |
(கலி-112) |
எனப் பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய (51) பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார். |
‘நறவினை வரைந்தார் ‘ஈண்டு நீர்மிசை’ என்னுங் கலிகளுங் காமத்து மிகுதிறத்தான் (51) அரசனை நோக்கிச் சான்றோர் கூறியவாகலின் மறுத்துக் கோத்தார். |
“வானமூர்ந்த வயங்கொளி மண்டில நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு” |
(அகம்-11) |
எனக் காடுறை யுலகத்துப் (5) பாலைவந்தது. |
“தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி வேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை மறப்பருங் காத லிவளீண் டொழிய விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய.” |
கலி |
இது மைவரையுலகத்துப் (5) பாலை வந்தது. |
‘மறந்தவ ணமையா ராயினும்’ என்னும் அகப்பாட்டுத் தீம்புனலுலகத்துப் (5) பாலை வந்தது. |
‘அருளி லாளர் பொருள்வயி னகல’ என்னும் அகப்பாட்டினுட் பெருமணலுலகத்துப் (5) பாலை வந்தது. |
இன்னும் பிறவுஞ் சான்றோர் செய்யுட் கண்ணே உரிப்பொருண் மயங்கியும் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. (13) |