பக்கம் எண் :
தொடக்கம்
கொண்டுதலைக் கழிதலும் சூ.17139

இதன் பொருள்:- கொண்டு  தலைக்கழியினும்-தலைவன்  தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்து
நின்று   பிரியினும்,  பிரிந்து  அவன்  இரங்கினும் - தலைவன்  உடன்கொண்டு போகாது தானே போதலில்
தலைவி   மனையின்கண்   இருந்து   இரங்கினும்,   ஓரிடத்தான  -  இவ்விரண்டும்  ஓரிடத்தின் கண்ணே
ஓரொழுக்கமாயின,   உண்டென   மொழிப  -  இவ்வொழுக்கந்தான்   நான்கு   வருணத்திலும்  வேளாண்
வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.
  

கொண்டு    தலைக்கழிதலால்    இடையூறின்றிப்   புணர்ச்சி   நிகழுமெனினும்,   பிரிவு   நிகழ்ந்தவா
றென்னையெனின்,
  

‘இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி.” 
  

  (41)
 

என     மேலே   கூறுவாராதலின்   தந்தையுந்  தன்னையருந்தேடிப்  பின்வந்து  இவ்வொழுக்கத்திற்கு
இடையூறு     செய்வரென்னுங்    கருத்தே    இருவருள்ளத்தும்   பெரும்பான்மை   நிகழ்தலிற்   பிரிவு
நிகழ்ந்தவாராயிற்று. ஆகவே பாலைக் கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று 

உதாரணம் :-

  

“வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடனாறு நாட்சுர
மரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப
வெம்மோ டொராறு படீஇயர் யாழநின்
பொம்ம லோதி பொதுள வாரி
யரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச்
சுரும்புசூ ழலரி தைஇ வேய்ந்தநின்
றேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந் தோம்ப றேற்றா யணிகொள
நுண்கோ லெல்வளை தெளிர்க்கு முன்னக
மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னா னடையே கள்வர்
பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்
மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நாரரை மருங்கி னீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்