தெய்வம் உணாவே மாமரம் புள்பறை சூ.20 | 157 |
ஐவனமும்4 வெதிர் நெல்லும்5. மா - யானையும், புலியும், பன்றியும், கரடியும் - மரம் - வேங்கையும் கோங்கும், புள் - மயிலும் கிளியும். பறை வெறியாட்டுப் பறையும், தொண்டகப்பறையும் செய்தி-தேனழித்தல். பண்-குறிஞ்சி. பிறவும் என்றதனால் பூ-வேங்கைப்பூவும், காந்தட் பூவும், குறிஞ்சிப் பூவும், நீர்-சுனை நீரும். அருவி நீரும் பிறவும் அன்ன. | பாலைக்கு நிலம் ஒதாது வேனிற்காலமும் நண்பகலும் ஓதினமை யானும், | “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.” | (சிலப்-காடுகாண்-64-66) | எனப் பிறசான்றோர் செய்யுள் அகத்து வருதலானும், இந் நிலங்களில் வேனிற் காலத்து நிகழ்வன, கருப்பொருளாகக் கொள்ளப்படும். தெய்வம் - கொற்றவை, உணவு-ஆறலைத்தலான்6 வரும் பொருள். மா-வலியழிந்த யானையும், வலியழிந்த புலியும் வலியழந்த செந்நாயும் - மரம் - பாலை, இருப்பை. கள்ளி, சூரை - புள் - எருவையும், பருந்தும் - பறை - ஆறலைப்பறையும், சூறைகொண்ட பறையும், செய்தி - ஆறலைத்தல்பண் - பாலை, பிறவும் என்றதனால், - பூ - மராம்பூ நீர் - அறுநீர்க் கூவலும்7 அறுநீர்ச் சுனையும், பிறவும் இந்நிகரன கொள்க. | மருதத்திற்குத் தெய்வம் இந்திரன்; ‘தீம்புனல் உலகம்’ (அகத்-5) எனவும் ‘வைகறை விடியல்’ (அகத்-9) எனவும், ஓதினமையால், அவ்விடத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. |
| 4. ஐவனம்-ஒருவகை நெல். 5. வெதிர் நெல் - மூங்கில் நெல். 6. ஆறு அலைத்தல்-வழிப்போவாரைத் துன்புறுத்தல் 7. அறு நீர்க் கூவல்-நீர் அற்றகிணறு |
|
|