பக்கம் எண் :
தொடக்கம்
158தொல்காப்பியம் - உரைவளம்

உணவு     -  நெல்,  மா - எருமையும்,   நீர் நாயும் - மரம் - மருதும் காஞ்சியும். புள் - அன்னமும்,
அன்றிலும்  -  பறை  -  நெல்லரி பறை.  செய்தி -  உழவு -  பண் - மருதம், பிறவும் என்றதனால், பூ -
தாமரையும் கழுநீரும். நீர் ஆற்றுநீரும் பொய்கை நீரும் பிறவும் அன்ன.
  

நெய்தற்குத்     தெய்வம்  வருணன்  ‘மணல் உலகம்’ (அகத்-5)  என்றதனானும்,  ‘எற்பாடு’ (அகத்-10)
என்றதனானும்,  ஆண்டு  நிகழ்பவை   கொள்க.   உணவு - உப்பு விலையும் மீன்விலையும் மா-கராவும்8
சுறவும், மரா - புன்னையும் கைதையும்9.புன்-கடற்காக்கை, பறை - நாவாய்ப் பறை. செய்தி - மீன்படுத்தலும்
உப்பு விளைத்தலும், பண் - செவ்வழி பிறவும் என்றதனால், பூ - நெய்தல், நீர் - கேணி நீரும் கடல் நீரும், பிறவும் அன்ன.
  

நச்சினார்க்கினியர்
  

20 தெய்வ முணாவே................மொழிப.
  

இது   நிறுத்த  முறையானே  யன்றி  அதிகாரப்பட்டமையின்  உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள்
கூறுதல் நுதலிற்று.
  

இதன்   பொருள்:- தெய்வம்  உணாவே மா மரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ -
எல்லாத்   திணைக்குந்   தெய்வம்   உணா விலங்கு மரம் புள்ளும் பறை தொழிலென்று இவற்றை யாழின்
கூற்றோடே கூட்டி,  அவ்வகை  பிறவும்  கரு என மொழிப-அவை போல்வன பிறவுங் கருவென்று கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.
  

‘யாழின்பகுதி’ என்றதனான்10 மற்றையபோலாது பாலைக்குப்  


8. முதலை
  

9. தாழை
  

10. உணா, மா, மரம் புள் என வாளா கூறியதுபோல் யாழ் எனக் கூறாது யாழின் பகுதி என்றதனால்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்