முல்லைக்கு உணா, வரகும் சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலுங் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ், பிறவுமென்றதனால் பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர், கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும். |
குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையும் கரடியும் பன்றியும்; மரம் அகிலும் ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும், மயிலும் பறை, முருகியமுந் தொண்டகப் பறையும்; செய்தி |