பக்கம் எண் :
தொடக்கம்
பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய சூ.22167

திணைநிலைப்பெயர்     என்றதனான்  அப்பெயருடையார்  பிறநிலத்து  இலர்  என்று  கொள்ளப்படும்.
அதனானே    எல்லா    நிலத்திற்கும்   உரியராகிய    மேன்மக்களை2   ஒழித்து    நிலம்பற்றி  வாழும்
கீழ்மக்களையே3   குறித்து  ஓதினார்  என்று  கொள்க. பெயர் என்றதனால் பெற்ற தென்னை? மக்கள் என
அமையாதோ?  எனின்,4  மக்களாவார்   புள்ளும்   மாவும்போல   வேறு பகுக்கப்படார்.  ஒரு நீர் மைய5
ராதலின்.   அவரை   வேறுபடுக்குங்கால்  திணைநிலைப்பெயரான்6  அல்லது  வேறுபடுத்தல்  அருமையின்,
பெயர் என்றார்.
  

நச்சினார்க்கினியர்
  

22. பெயரும் வினையுமென்.....................பெயரே
  

இது ‘பிறவும்’ (18) என்றதனால் தழுவிய பெயர்ப்பகுதி கூறுகின்றது..
  

இதன்பொருள்:-  திணைதொறும்  மரீஇய  பெயர்-நால்வகை  நிலத்தும் மரீஇப்போந்த குலப்பெயரும்,
திணைநிலைப்பெயர் - உரிப்பொருளிலே    நிற்றலையுடைய    பெயரும்,     பெயரும்    வினையுமென்று
ஆயிருவகைய - பெயர்ப்பெயரும் வினைப் பெயருமென்று அவ்விரண்டு கூற்றையுடையவாம் என்றவாறு.
  

நால்வகை  நிலத்தும்   மருவிய  குலப்பெயராவன:-  குறிஞ்சிக்குக்  கானவர் வேட்டுவர் குறவர் இறவுளர்
குன்றுவர்  


2. மேன்மக்கள் - அந்தணர் அரசர் வணிகர் வேளாளர்
  

3. கீழ்மக்கள் - பொதுமக்கள் நிலங்களில் வாழும் நிலப்பெயர் கொண்டமக்கள்
  

4. மக்கள் என்னாது அவரைத் திணைநிலைப்பெயர் எனக்கூறியது என்னை எனின்.
  

5. புட்கள்  கிளி   குருவி  பருந்து  எனவும் மாக்கள் புலி மான் எனவும் பகுக்கப்படுதல் போல் மக்கள்
பகுக்கப்படுதல் இல்லை.
  

6. ஆயர் வேட்டுவர் எனப் பகுக்கப்படுதல்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்