வேட்டுவித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர்; ஏனைப் பெண் பெயர்7 வருமேனும் உணர்க. |
முல்லைக்குக் கோவலர் இடையர் ஆயர் பொதுவர் இடைத்தியர் கோவித்தியர் ஆய்த்தியர் பொதுவியர். |
நெய்தற்கு நுளையர் திமிலர் பரதவர் நுளைத்தியர் பரத்தியர்; ஏனைப் பெண்பெயர்1 வருமேனும் உணர்க. |
மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைச்சியர்; ஏனைப் பெண்பெயர்2 வருமேனும் உணர்க. |
முன்னர் ‘வந்த நிலத்தின் பயத்த’ (19) என்புழிக் காலத்தையும் உடன் கோடலின் ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழுதொடு மருவுதலும் பெறப்படுதலிற் பொழுது முதலாக வரும் பாலைத் திணைதொறுமரீ இயற்பெயருந் திணை நிலைப்பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் எனவும் மீளி விடலை காளை எனவும் வரும். |
இனி உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர் பெயரும்3 நாடாட்சி பற்றி வரும் பெயருமாம். குறிஞ்சிக்குவெற்பன் சிலம்பன் பொருப்பன்; கொடிச்சி; இஃது4 ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை யென்றதனாற் கொள்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறைநாடன், மனைவி நெய்தற்கு கொண்கண் துறைவன் சேர்ப்பன் மெல்லம் புலம்பன், தலைவி பெயர் வந்துழிக் காண்க. மருதத்திற்கு மகிழ்நன் ஊரன் |
|
7. கானவர் இறவுளர் எனும் ஆண்பாற்கேற்ற பெண்பாற் பெயர்கள். இக்காலத்து இறுளச்சி என்பது இறவுளர்க்குப் பெண்பாற் பெயர் போலும். |
1. ஏனைப் பெயர் திமிலர்க்கு ஏற்ற பெண்பாற் பெயர். |
2. களமர்க்கேற்ற பெண்பாற் பெயர். |
3. பெயர்ப் பெயர்-நிலப்பெயர் |
4. இஃது-கொடிச்சி, கொடிச்சிக்கேற்ற ஆண்பாற் பெயர் இல்லை. கொடியன் எனின் ஏலாது. |