(இ-ள்) ஏனோர் மருங்கினும் எண்ணும் காலை - ஏனை நிலத்துள்ள மக்கண்மாட்டும் ஆராயுங் காலத்து, ஆன் அ வகைய திணை நிலைப்பெயர் - அவ்விடத்து அவ்வகைய திணை நிலைப்பெயர். |
என்றது, திணைதொறும் குலப்பெயரும் தொழிற் பெயரும் கிழவர் பெயரும் வரும் என்றவாறு1. ஆன் என்பது அவ்விடம்; அ என்னும் சுட்டு நீண்டிசைத்தது. அவை வருமாறு:- குறிஞ்சிக்கு மக்கட்பெயர் குறவன் குறத்தி என்பன தலை மக்கட்பெயர்: மலைநாடன் வெற்பன் என்பன பாலைக்கு மக்கட்பெயர்; எயினர் எயிற்றியர் என்பன; தலைமக்கட்பெயர், மீளி விடலை என்பன. மருதத்திற்கு மக்கட்பெயர்; உழவர் உழத்தியர் என்பன; தலைமக்கட்பெயர் ஊரன் மகிழ்நன் என்பன நெய்தற்கு மக்கட்பெயர், நுளையர் நுளைச்சியர் என்பன; தலைமக்கட் பெயர் சேர்ப்பன் துறைவன் கொண்கண் என்பன. பிறவும் அன்ன. |
“கைக்கிளை முதலா” (அகத்-1) என்னும் சூத்திரம் முதலாக இத்துணையும் கூறப்பட்டது. நடுவணைந்திணை நிலத்தானும் காலத்தானும் கருப்பொருளானும் உரிப்பொருளானும் நிலமக்களானும் தலைமக்களானும் வரும் எனவும், அவை இலக்கண நெறியானும் வழக்குநெறியானும்2 வரும் எனவும், கைக்கிளை பெருந்திணை உரிப்பொருளான் வரும் எனவும், அகத்திணை ஏழிற்கும் இலக்கணம் ஓதியவாறு. |
உதாரணம் |
முல்லைத் திணைக்குச் செய்யுள் |
“முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புறக் கொடுப்பக் கருவி வானம் கதமுறை சிதறிக் |
|
1. இத்தொடர் முன் இரு சூத்திரங்களாற் பெறப்பட்ட தெளிந்த கருத்தாகும். |
2. வழக்கு-நாடக வழக்கு, உலகியல் வழக்கு |