பக்கம் எண் :
தொடக்கம்
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் சூ.26213

பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வே மாதல் அறியாள் முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறுங் கையற் றொடுங்கிருப் புலந்து
பழங்கண் கொண்ட பசலை மேனியன்
யாங்கா குவள்கொ றானே வேங்கை
ஊழுறு நறுவி கடுப்பக் கேழ்கொள
ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள்
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் லொதுக்கின் மாஅ யோளே”
  

  (அகம்-174)
 

இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது.
  

இதனுட்     “பூக்கோளேய    தண்ணுமை  விலக்கிச் செல்வே” மென்றலின் அரசனாற் சிறப்புப் பெற்ற
தலைவனாயிற்று,   இன்னுஞ்     சான்றோர்     செய்யுட்களுள்   இங்ஙனம்   வருவனவற்றை  அவற்றின்
பொருணோக்கி உணர்க.
  

பாரதியார்
  

26. ஏவல்மரபின்.......................அன்னர்
  

கருத்து :-  இதுவும் அகப்பகுதியில் நானில  மக்களேயன்றி  திணைப்பெயர்க்குரிமை கொள்வாரின்னுஞ்
சிலருளர் என்பது கூறுகின்து.
  

பொருள்:-   ஏவன் மரபின் ஏனோரும்  -    ஒருவரிடத்தடைந்து,  அவர்  குற்றேவல்  செய்வதையே
மரபாகவுடைய   (அடியாரும் வினைவலருமல்லாத)    பிறரும்;     உரியர்-நானில  மக்களைப்  போலவே
அகத்திணைக்குரிமை       யுடையராவர்;    ஆகிய   நிலைமையவரும்-அவ்வாறு   ஒருவரையுமடையாமல்;
நாள்தோறும்   ஏவுவார்  தொழில்   ஏற்பதாகிய    நிலைமையுடையோரும்;  அண்ணர்-(அடைந்தாட்படும்
குற்றவேல் மக்களைப் போலவே) அகத்திணைக் குரிமையுடையராவர்.
  

குறிப்பு:-  ‘ஏனோரும்’   ‘நிலைமையவரும்’  என்பவற்றினும்  மைகள்  முன்னர்க்  கூறியவரைக் குறித்து
நிற்கும் இறந்தது தழீஇய எச்சவும்மைகளாம். இதற்கும் கைக்கிளை பெருந்திணை  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்