பக்கம் எண் :
தொடக்கம்
ஓதல் பகையே தூது இவை பிரிவெ சூ.27217

கற்றல்   வேண்டிப்   பிரிதல்,     பகைவயிற்  பிரிதலாவது  மாற்று  வேந்தரோடு  போர்கருதிப்  பிரிதல்,
தூதிற்குப் பிரிதலாவது இருபெரு வேந்தரைச் சந்து செய்தற் பொருட்டுப் பிரிதல்.
  

25. நச்சினார்க்கினியர்
  

இத்துணையும்  அகத்திற்குப்  பொதுவாகிய  முதல் கருவுரிப் பொருளே கூறி இனி இருவகைக்
கைகோளுக்கும் பொதுவாகிய பாலைத்திணை கூறிய எழீஇயது2
  

(இ-ள்)  பிரிவே  -  பாலையென்னும்  பிரிதற்   பொருண்மை;  ஓதல்  பகையே  தூது  இவை - ஓதற்
பிரிதலும்,  பகைமேற்  பிரிதலும்,  பகைவரைச்  சந்து  செய்தன்  முதலிய   தூதுற்றுப் பிரிதலுமென மூன்று
வகைப்படும் என்றவாறு.
  

ஒரோவென்றே     அறமுந்  துறக்கமும்  பொருளும்  பயத்தற்   சிறப்பு நோக்கி இவற்றை இவையென
விதந்தோதினும்   இவையென்றதனை   எடுத்தலோசையாற்   கூறவே  அறங்கருதாது அரசரேவலால் தூதிற்
பிரிதலும்   போர்த்தொழில்   புரியாது   திறைகோடற்கு இடை நிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும்.
அறங்   கருதாது   பொருள்   ஈட்டுதற்குப்  பிரிதலும்  பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இவற்றோடு
ஓதாது   பிற்கூறினார்.   அந்தணர்க்குரிய  ஓதலுந்  தூதும்  உடன்  கூறிற்றிலர்,  பகை பிறந்தவழித் தூது
நிகழ்தலின்.
  

பாரதியார்
  

27. ஓதல்... .... ..... .... .... பிரிவே
  

கருத்து:-     இது,   மேல்      முதற்சூத்திரத்திற்   கூறிய   ஏழுதிணைகளுள்   குறிஞ்சி   முதலிய
நடுவணைந்திணைகளின்       பொது   வியல்புகள்   இதுவரையுங்   கூறி,  இனி  அவ்வைந்திணைகளுள்
நடுவணதானதும்,    களவு    கற்பு  என்னும்  இருவகைக் கைக்கோள்களுக்கும் பொதுவானதும், தனக்கென
நிலம்     பகுக்கப்படாததுமாகிய    பாலையென்னும்  பிரிவொழுக்கத்தின்  சிறப்பியல்புகள்  கூறத்தொடங்கி
பிரிவின் வகைகளுள் சில உணர்த்துகிறது.


2. கூறியஎழீஇயது கூற எழுந்தது.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்