சேரன் செங்குட்டுவனார் கண்ணகியைக் கடவுள் மங்கலம் செய்தற்குப் பிரிந்த பிரிவு சிலப்பதிகாரத்திற் கண்டு கொள்க. இத்துணையும் பிரிவு அறுவகைப்படும் என்றவாறாயிற்று அஃதேல் பரத்தையிற் பிரிவு என்பதோ எனின், அது நிலம் பெயர்ந்து உறையாமையானும், இவைபோல் சிறக்காமையானும், அறமுறைமை செய்யப் பிரிதலும் பொருள் காரணமாகப் பிரிதலுமின்றிப் பிரிதலினாலும், கற்பியலுள் கூறப்படும் என்க. ஈண்டும் சிறுபான்மை கூறுப. |