திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நகைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்; |
அறல்சாயய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழைப்பதை யருளுவா ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள் வெஃகி யகன்றநாட் டுறைபவர்; என நீ, |
தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் சேருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.” |
(கலி-26) |
இதனுள் ‘ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு எனவே, முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர்ந்தாரென்பதூஉம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் காத்தா னென்பதூஉம், ‘விருந்து நாட்டு’ என்பதனால் திசைபெற்ற புதிய நாடென்பதூஉம் பெற்றாம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. |
ஏதினொடு-புதியநாடு. ஆறின்றிப்3 பகைவர் பொருளை விரும்பின் நாட்டென்றும் அவரை யகன்ற நாட்டென்றும் பொருள் கூறுக. செருவின் மேம்பட்ட4 என்றது நாடுகளை. அதனாற் பெற்ற வென்றியெனவே நாடு திறைபெற்றமை கூறிற்று. |
“படைபண்ணிப் புனையவும்” பாலைக்கலியுள் (17) “வல்வினை வயக்குதல் வலித்திமன்” என்பதற்கு வலிய போர் செய்து அப்பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலுத்தியென |
3. அறநெறியின்றி 4. செருவின் மேம்பட்ட-போரில் மேம்பட்டனவாகி நாடுகள்-வினையா லணையும் பெயர். |