பி.இ.நூ. |
நம்பி 78, இல. அக.446 |
....................பொருள் வயிற் பிரிவும் உரைத்த நால்வர்க்கும் உரியவாகும். |
இளம்பூரணர் |
31. மேலோர்...................உரித்தே. |
இது, நிறுத்த முறையானே அறம் காரணமாகப் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்துறு மேலோராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து. (ஏகாரம் ஈற்றசை) |
நச்சினார்க்கினியர் |
31. மேலோர்...................உரித்தே. |
இஃது எய்தாத தெய்துவித்தது. |
(இ-ள்) மேலோர் முறைமை - மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிர்க்கு ஓதிய அறந்தலைப் பிரியாப் பொருள் செயல் வகை, நால்வர்க்கும் உரித்து - அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து என்றவாறு. |
இதற்கு வாணிகர்க்கு வேத நூலுள் இழைத்த பொருண் முடிவானே இந்நால்வரும் பொருண் முடிப்பரெனிற்1 பிரிவொன்றாகி மயங்கக் கூறலென்னுங் குற்றந் தங்குமாகலின் அது கருத்தன்று. இந்நால்வருள் அந்தணர் ஓதலுந் தூதும் பற்றிப் பொருண் முடித்தலும், அரசர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண் முடித்தலும் உயர்ந்தவேளாளர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும் உழுதுண்பார் வாணிகத்தாற் பொருண் முடித்தலுங்கருத்து. |
1. வாணிகர்க்கு ஓதிய பொருட்பிரிவே நால்வர்க்கும் உரித்து எனின். |