குறிப்பு: மேலோர் பிரிவு ஓதல் தூது, காவல் பற்றியாமென்பதும் மேலிரு சூத்திரங்கள் குறித்தன. இதற்குப் பிறர் கூறும் வேறுபொருள்கள் சூத்திரக் கருத்தன்மை, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இச்சூத்திரத்திற்குத் தம்முள் மாறுபடவுரை கூறுதலான் விளங்கும். மேலோர் தேவரென்பர் இளம்பூரணர் வணிகரென்பர் நச்சினார்க்கினியர் தேவரைப்பற்றிய குறிப்பு ஈண்டு வேண்டப்படாமையானும் நான்கு வருணத்தாருள் வணிகர் மேலோராக மூன்றாம் வகுப்பினரே யாதலானும், இவ்வீருரையும் சூத்திரக் கருத்தோடு மாறுபடும். அது போலவே, நால்வர் என்பதை நான்கு வருணத்தார் என்று இளம்பூரணரும், வணிகரை விலக்கி வேளாளரை இருவகையராக்கி அந்தணரரசரோடு கூட்டி நால்வர் என நச்சினார்க்கினியரும், தம்முள் மாறிக் கூறுவதும் |