பக்கம் எண் :
தொடக்கம்
24தொல்காப்பியம் - உரைவளம்

கத்து5     அகமும்  புறமும்  ஆகிய  உரிப்பொருள்  கூறுகின்றாராதலான்  புணர்தல், பிரிதல், இருத்தல்,
இரங்கல்,  ஊடல்,  என அமையுமே எனின், புறப்பொருட்கண் நிரை கோடலை  வெட்சி  எனக்  குறியிட்டு
ஆளுமாகலான்  ஈண்டு  இப்பொருளையும்6  முல்லை  குறிஞ்சி  மருதம்  நெய்தல்  என  ஆளும்  என்க.
இதனாற்  பயன்  என்னையெனின்,   உரிப்பொருளே   திணையென  உணர்த்துவாராயின்  முதற்பொருளும்
கருப்பொருளும்  திணையாதலால்   தோன்றாதாம்.   அவையெல்லாம்   அடங்குதற்   பொருட்டு  முல்லை
குறிஞ்சி  பாலை  மருதம்  நெய்தல்  என்றார்  என்பது6.   அவை   ஆமாறு  வருகின்ற  சூத்திரங்களான்
விளங்கும். (ஏகாரம் ஈற்றசை)                                                              (2)
  

நச்சினார்க்கினியர்
  

2. அவற்றுள் ........ பண்பே.
  

இது முற்கூறிய ஏழனுள் தமக்கென நிலம் பெறுவனவும் நிலம் பெறாதனவுங் கூறுகின்றது.
  

இதன் பொருள்:-  அவற்றுள்  -  முற்கூறிய  ஏழு  திணையுள்,  நடுவண்  ஐந்திணை  -  கைக்கிளை
பெருந்திணைக்கு
  

இவ்வதிகாரத்தில்     அகமும்   புறமும்  கூறுகின்றார்.  அகமும் புறமும் உரிப்பொருளுடையன. அதனால்
அதன்  ஐந்திணைகளை  உரிப்பொருளடியாகப்  புணர்தல்   பிரிதல்   இருத்தல்   இரங்கல்  ஊடல் என்ற
பெயராலேயே   கூறலாமே?   குறிஞ்சி   பாலை  முல்லை  நெய்தல்  மருதம்   என   நிலப்   பெயரால்
கூறுவானேன்? இது வினா, இதற்கு விடை.
  

நிரை     கோடலாகிய  உரிப்பொருள்  நிகழ்ச்சியை  வெட்சி  எனத்  தனிப் பெயர் கொடுத்தல் போல
(இவ்வாறே  பிறவும்)  புணர்தலாகிய  உரிப்  பொருட்குக்   குறிஞ்சி  எனப்   பெயர்  கொடுத்து  ஆள்வர்
ஆசிரியர் (இவ்வாறே பிறவும்)
  

இதனால்   பயன்   என்?   வினா  விடை  உரிப்பொருளேயன்றி  முதற்பொருளும்  (கருப்பொருளும்)
திணையுணர ஏதுவாம் என்பது.
  


5. இந்நூலகத்து என்றாரேனும் இவ்வதிகாரத்து எனக்கொள்க.

6. புணர்தல் முதலிய உரிப்பொருளையும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்