கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால் என்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகாய் எம்மையும் அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு |
(பாலைக்கலி-6) |
38. | எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான | (38) |
|
ஆ.மொ.இல. |
In any aspect of love the lady-love cannot have the right of riding on the horse made of palmyra - stem. |
இளம்பூரணர் |
38. எத்திணை மருங்கினும்...............யான |
இத்துணையும் பாலைக்குரித்தாகிய பிரிவிலக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருந்திணைக்கு, உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) எத்திணை மருங்கினும்-எல்லாக் குலத்தினிடத்தினும் மகடூஉ மடல்மேல் (இல்லை) - பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை நெறிமை இன்மையான - பொலிவுபெற நெறிமை இல்லாமையான். |
‘மடன்மேல்’ என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது. இல்லை என்பது மேலைச் சூத்திரத்தினின்று தந்துரைக்கப்பட்டது. ‘பொற்புடை நெறிமை’ என்பது பெண்பாற்கு இன்றியமையாத நாணம் முதலாயின. மகடூஉ மடலேறுதல் உண்டு என்பது பெற்றாம் இது, “புணரா இரக்கமாகிய கைக்கிளைக்கும், “தேறுதலொழிந்த காமத்து மிகுதிறன்” (அகத்-51) ஆகிய பெருந்திணைக்கும் உரித்தாகியவாறு கண்டு கொள்க. |
(ஈற்றகரம் சாரியை) |