பக்கம் எண் :
தொடக்கம்
264தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்)     போகிய திறத்து நற்றாய் தன்னும் அவனும் அவளும் சுட்டி-தலைமகள் உடன் போகியவழி
நற்றாய்  தன்னையும்  அவனையும்  அவளையும்  சுட்டி,  மன்னும்   நிமித்தம் -  நிலைபெற்ற நிமித்தம்,
மொழிப்பொருள்  தெய்வம்  அவற்றொடு-மொழிப்பொருள்  தெய்வம்   என்பனவற்றொடு, நன்மை, தீமை
அச்சம்  சார்தல்  -  தனக்கும்  அவர்க்கும்  உளதாகிய  நன்மை     தீமை அச்சம் சார்தல் என்பனவும்,
அன்னபிறவும்   அவற்றொடு   தொகைஇ-அத்தன்மை  பிறவும்   அவற்றொடு  கூட்டி-முன்னிய   காலம்
மூன்றொடு  விளக்கி  -  குறித்த  காலம் மூன்றும் ஒருங்கு தோற்றுவித்தது தோழி  தேஎத்தும் கண்டோர்
பாங்கினும்  புலம்பலும்-தோழி  மாட்டும்  கண்டோர் மாட்டும் புலம்புதலும்,   அவ்வழி ஆகிய கிளவியும்
உரிய-அவ்வழி நிகழும் கூற்றும் உரிய.
  

“போகிய     திறத்து நற்றாய்” என்றதனை முன்னே6 கூட்டுக “அவற்றொடு” என்பதனைத் தெய்வம்
என்பதனோடும் கூட்டுக7. முன்னிய காலம் மூன்றுடன் விளக்குதலாவது, முன்பு இத்தன்மையளாயினாள்;
இப்பொழுது  இத்தன்மையளாகா  நின்றாள்;  மேல்  இன்னளாகுவள்  என  மூன்று  காலமும்  ஒருங்கு
தோற்றுவித்துப் புலம்புதல். அவ்வழி ஆகிய கிளவியும் என மொழிமாற்றுக.
  

அவற்றிற்குச் சில உதாரணங்கள்.
  

“தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால்-தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை”

(ஐந்திணை ஐம்பது-37)

என்பது தலைமகன் உடன்போய வழி நற்றாய் கவன்றுரைத்தது.
  

“மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொடு
அஞ்சில் ஓதியை வரக்கரைந் தீமே”.  
  

(ஐங்குறு 391) 

6. முன்னே - உரைத்தொடக்கத்தில்  

7. நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் (ஆகிய) அவற்றொடு எனக்கூட்டுக.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்