பக்கம் எண் :
தொடக்கம்
266தொல்காப்பியம் - உரைவளம்

வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்து
ஆர்வ நெஞ்சமொடு ஆய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா விழவின் கோவல் கோமான்
நெடுந்தேர்க் காரிகொடுங்கால் முன்துறைப்
பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கும்
நெறியிருங் கதுப்பினென் பேதைக்கு
அறியாத் தேஎத் தாற்றிய துணையே.”
  

(அகம்-35)
 

என்பது செவிலி தெய்வம் பரா அயதுபிறவும் அன்ன.
  

நச்சினார்க்கினியர்
  

39. தன்னும்.......உரிய
  

இது   பிரிவிலக்கணம்   அதிகாரப்பட்டு   வருதலிற்  கொண்டு   தலைக்   கழிந்துழி   வருந்துவோர்
தாயரென்பதூஉம் அதனது பகுதியுங் கூறுகின்றது.
  

(இ-ள்)     போகிய திறத்து நற்றாய் - தலைவியுந் தலைவனும் உடன்போய காலத்து  அம்மகட் பயந்த
நற்றாய்,  தன்னும்  அவனும்  அவளுஞ்  சுட்டிக்காலம்  மூன்றுடன் மன்னும் நன்மை     தீமை முன்னிய
விளக்கிப்   புலம்பலும்-தன்னையுந்  தலைவனையுந்  தன்  மகனையுங்  குறித்துக்  காலம்     மூன்றுடன்
நிலைபெற்று  வரும்  நல்வினை  தீவினைக்குரிய  காரியங்களைத்  தன்  நெஞ்சிற்கு  விளக்கி   வருந்திக்
கூறுதலும்;  அச்சஞ்  சார்தல்  என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப்பொருள்    தெய்வம் அவற்றொடு
தொகை  இப் புலம்பலும் - அச்சஞ் சார்தலென்று கூறப்பட்டவற்றையும்    அவைபோல்வன பிறவற்றையும்
பல்லி முதலிய சொல் நற்சொல் தெய்வங் கட்டினுங் கழங்கினும்1 இட்டு உரைக்கும் அத்தெய்வப்
  


1. கட்டு  =  கட்டுவிச்சி (குறத்தி) கூறும்  குறி, கழங்கு - கழற்சிக்காய் கொண்டு கணக்கிட்டுக் கூறும்குறி
கணக்கு ஒற்றை இரட்டை என்பது.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்