உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் சேலல் மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலல்மாலைக் ஒழுக்கத்தீர் இவ்விடை என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ பெரும.” |
(கலி-பாலை-8) |
“செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள் மையணற் காளையொடு பைய இயலிப் பாவை அன்னஎன் ஆய்தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே.” |
(ஐங்குறு 389) |
என வருவதும் அது, |
“காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாள்இழந் தனவே அகல்இரு விசும்பின் மீனினும் பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.” |
(குறுந்-44) |
எனவருவது, சுரத்திடை வினாஅயது நிகழ்ந்த பின்னர்க் கூறியது. |
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி* |
நச்சினார்க்கினியர் |
40. ஏமப்பேரூர்.......உளரே |
(இ-ள்) ஏமப் பேர் ஊர்ச்சேரியும் சுரத்தும்-பதியெழுவறியாப் பேரூரிற்1 றெருவின்கண்ணும் அருவழிக்கண்ணும்; தாமே செல்லும் தாயரும் உளர்-தந்தையுந் தன்னையரும் உணராமுன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் என்றவாறு. |
* முன்சூத்திரம் நற்றாய்க்குரியது. இச்சூத்திரம் செவிலிக்குரியது. ஆதலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி என்பது பொருந்தாது. இருவரும் தாயர் எனப்படுதலின் இவ்வாறு கூறினார் போலும். 1. தாம் ஊரினின்றும் மக்கள் வாழ்வு வளம்வேண்டிப்பிற ஊர்க்கு அல்லது நாட்டிற்குச் செல்லுதலை அறியாதபடிக்கின்பமும் காவலும் அமைந்த பேரூர். |