ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும் என்பது, தனக்குப் பாங்காகித் தோன்றுவார் பக்கத்துப்பிரியும் வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும்8 வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு. |
மூன்றன் பகுதியாவன, நால்வகை வலியினும்9 தன் வலியும் துணை வலியும் வினைவலியும் என்பன. அவை10 பகைவர் மாட்டு உள்ளன. |
மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங்11 கொண்ட அருமை என்றவாறு. |
தோன்றல் சான்ற என்பது (இவை) மிகுதல் சான்ற என்றவாறு. |
மாற்றோர் மேன்மையாவது, மாற்றோரது உயர்ச்சியானும் என்றவாறு. ஆறன் உருபு எஞ்சி நின்றது.12 |
மூன்றன் பகுதியானும் மண்டிலத் தருமையானும் தோன்றல் சான்ற மாற்றோர் எனக் கூட்டுக. |
பாசறைப் புலம்பல் என்பது, பாசறைகண் தலைமகன் தனிமை யுரைத்தல்13 என்றவாறு. |
8 அது என்றிருத்தல் வேண்டும் அதுவும் பிரிவு எனின் ஆம். |
9 தன்வலி, துணைவலி, வினைவலி, மாற்றான்வலி (குறள்-471)நச், உரை, பாரதியார் உரைபார்க்க. |
10 தன்வலி, துணைவலி, வினைவலி |
11 தமக்குப் பகைவரின் நாடு. |
12 பிறவுருபுகளும் விரிக்கப்படும் நிலையில் இருத்தலின் ஆறன் உருபு எஞ்சிநின்றது என்றார். |
13 தனிமையுற்றதைத் தலைவன் தானே கூறுதல். |