பக்கம் எண் :
தொடக்கம்
ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் சூ.44337

வாயினுங்  கையினும்6   வகுத்த  பக்கமொடு  ஊதியம்    கருதிய   ஒரு    திறத்தானும் - உண்மைப்
பொருளிடத்தும்  அதற்கேற்ற  ஒழுக்கத்திடத்துங்  கூறுபடுத்துக்கூறிய நூல்களாற் பெறும்  பெறும் பயனைக்
கருதிய ஒரு கூற்றின்கண்ணும்;
  

என்றது,  வீடுபேற்றிற்கு  உதவியாகிய  நூல்களை  ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத்  தலைவன்
கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க.
  

புகழும்     மானமும்    எடுத்து    வற்புறுத்தலும்-போகம்   வேண்டிப்   பொதுச்சொற்   பொறுத்தல்
அரசியலன்றாதலிற்    நமக்கேற்ற    புகழும்    பெருமையும்7   எடுத்துக்காட்டி   இதனாற்  பிரிதுமெனத்
தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்.
  

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
  

தூது  இடையிட்ட  வகையினானும்  -  இருபெருவேந்தர்  பொருவது  குறித்துழி   இருவரையுஞ்  சந்து
செய்வித்தற் பொருட்டுக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக் கண்ணும்;
  

ஒருவனுழை     ஒருவன்   மாற்றங்கொண்டுரைத்தலிற்8   தூதாயிற்று.   வகையென்றார்,  வாணிகரில்9
அரசர்க்கும்  அரசரில்  அந்தணர்க்குந்   தூது  சிறந்ததென்றற்குங்,  குறுநிலமன்னர்க்குப்  பெரும்பான்மை
யென்றற்கும்,  வேந்தர்  தம்மின்   இழிந்தாருழைத்   தூதுசேறல்   உரித்தென்றற்கும். இதற்குத்  தலைவன்
கூற்று வந்துழிக் காண்க.
  

ஆகித்தோன்றும்   பாங்கோர்   பாங்கினும்-தனக்கு  ஆக்கஞ்  சிறந்த  நட்புடையோராகித்  தோன்றும்
நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும்.  


6 வாய்  -  வாய்மை,  கை-ஒழுக்கம்  வாயான்  வகுத்த பக்கம் படைக்கலம் பயிறல் என்றும் கூறுவர்
இளம்பூரணர்
  

7 மானம்-குற்றம்என்பர் இளம்பூரணர்.
  

8 ஒரு வேந்தனிடத்து ஒருவேந்தன் சொன்னவற்றை உளங்கொண்டு சென்று கூறலின்.
  

9 வாணிகரில் - வாணிகரைக்காட்டிலும்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்