இதற்கு “மலை மிசைக் குலைஇய” (அகம்-84) என்பதூம் “இருபெரு வேந்தர் மாறுகொள்” (அகம்-173) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க. |
மூன்றன் பகுதியும்10 - அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காம நுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்; |
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. |
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர் தமது மீக்கூற்றங்11 கருதிப் பிரிதற்கண்ணும்; |
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. |
தோன்றல் சான்ற என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின் அதுவும் பிரிதற்கு ஏதுவா மென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து. |
பாசறைப் புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துத் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்; |
இதனைக்12 ‘கிழவி நிலையே’ (தொ பொ-கற்-சரு) என்னுஞ் |
10 இளம். உரைபார்க்க இது பொருள்வயிற் பிரிவாகும். பாரதியார் உரை பார்க்க. |
11 மீக்கூற்றம்-தன்னைப் பற்றி மேலாகக் கூறுதல் |
12 பருவங்கண்டுழியும் தூதுகண்டுழியும் வருந்துவள் எனத் தலைவன் வருந்தும் என்னும் இக்கருத்தை, ‘கிழவி நிலை’ என்னும் சூத்திரத்தில் தலைவன் பாசறைப் புலம்பல் வெற்றி கொண்ட பின்னரேயாகும் என்று கூறியிருத்தலின் பருவம் கண்டபோதும் அவள் வருந்துவள் எனப் புலம்பல் என்பது மறுக்கப்பட்டுள்ளது. என்பது தடை. அதற்கு விடை: வென்றிக் காலத்தும்’ என உம்மை தொடுத்து அவ்வெச்ச உம்மையால் பருவம் வந்துழியும் தூதுகண்டுழியும் என்பனவும் கொள்க. |