பொருள் வலித்தலும்; அகற்சிய தருமையும் - அவளைப் பிரிந்திருக்க ஒல்லாமை பொருட் பிணியை மெலித்தலும்; ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் - ஆக இவ்வாறு (ஒன்றுக்கொன்று மாறுபட்டுப்) பொருந்தாத பொருள் பற்றி வலிக்கும் பிரிவின் பகுதிகளிலும்; வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியங்கருதிய ஒருதிறத்தானும் நூல் முதலிய வாயாற் கற்கும் கல்வியும் படை இயம் ஓவியம் முதலிய கையாற் பயிலும் கலையும் என வகுக்கப்பட்ட இருதிறக்கல்விப் பகுதிகளின் பயனை எண்ணிப்பிரியும் ஒரு பகுதிக் கண்ணும்; புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் - (இவ்விரண்டிலும்) பிரிவால் வரும் புகழையும் பிரியாமையால் வரும் குற்றத்தையும் விலக்கி வலியுறுத்துமிடத்தும் தூதிடையிட்ட வகையினானும் - தலைவியைப்பிரிந்து வேந்தரிடை செல்லும் வாயில் வகைகளிலும்; ஆகித்தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும்-மேலே கூறியாங்கு பொருள் ஓதல் தூது என்ற பிரிவின் பகுதி மூன்றிலும் கூற்றுக்கு அமைந்து வரும் பகுதிதொறும் ஏற்றவிடத்தும்; மண்டிலத்தருமையும்-பகைப்புலத்தின் அருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - புகழாற் சிறந்த பகைவரின் பெருமையும், பாசறைப் புலம்பலும் - போர்க்களக்கட்டூரிற் செரு முடிந்தபின் தலைவியை உள்ளும் தலைவன் தனிமையும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத் திறவகையினும்-வந்தவினை முடிந்தபொழுது தேர்ப்பாகனொடு தலைவன் தான் செய்ய விரும்புவன கூறும் வகையினும்; காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் - பிறர்நாடு காக்குமிடத்தானாம் ஓர் பிரிவின் கண்ணும்; பரத்தையின கற்சியிற் பரிந்தோட்குறுகி-பரத்தைப் பிரிவால்பிரியும் தலைவியை அணுகி; இரத்தலும் - தன் தவறு பொறுக்குமாறு கூறித் தலைவியைத் தேற்றலும்; என இருவகையொடு - என இவ்விரண்டு வகையொடு கூட; உரைத்திற நாட்டம் - மேற்கூறிய இடங்களிலெல்லாம் கூற்றுவகை நாடுதல்; கிழவோன் மேன - தலைவன்கண் நிகழும்.
குறிப்பு: இச்சூத்திரம், ஒன்றாத்தமரினும், என்பது முதல் ஒரு திறத்தானும் என்றதுவரை உடன்போக்கில் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டும் பகுதியும், பின் எஞ்சியவெல்லாம் பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச்